தண்டவாளத்தில் இரயிலுக்குத்தானே வேலை மயிலுக்கென்ன வேலை

தண்டவாளத்தில்
இரயிலுக்குத்தானே வேலை?
மயிலுக்கென்ன வேலை?

தங்கத்தின் விலை உயர்வதுபோல்
இன்றிலிருந்து உயரலாம்,,
தண்டவாளத்தின் விலையும்...

தண்டவாளம்
துருபிடித்து பார்த்திருக்கிறேன்,
துரு துருவென இருப்பதை
இப்போதுதானடி பார்க்கிறேன்...

பயணிகள் அவதிப்படுகிறார்கள்
என்ஜின் கோளாறால்,
உனை கண்டபின்
இதயத்திற்கே கோளாறு பிடிக்கும்போது
என்ஜின் எம்மாத்தம்?

ஒருவேளை
தற்கொலை செய்துகொள்ள‌
வந்திருக்கிறாயோ?
அடி பைத்தியக்காரி,,
உனை கண்டபின்
கடந்துச்செல்ல‌
எப்படி மனம்வரும் இரயிலுக்கு???

எழுதியவர் : சுகுமார் சூர்யா (21-Oct-15, 1:22 am)
பார்வை : 187

மேலே