பாடைக்கு பொருளானேன்

இனி என்றென்றைக்கும்
பிரிவதற்குத்தான் என்றால்
அந்த அரணில் வைத்து
ஏன் கண்டுமுட்டினோம் ம்ம்ம்
பிரிவை சொல்ல
நிழலை அனுப்பினாய்
இதோ மூச்சவிழ்த்துப்போகின்றன
மூர்க்க நினைவுகள்
உடலின் ஆசைக்கு
உன் புடவை போர்த்தினேன்
இளமைக்குள் சென்று
செறிக்கின்ற முன்னமே
இன்னுயிரே
ஆடையற்ற மேனியாய்
பாடைக்கு பொருளாகிவிட்டேனடி
கண்ணம்மா ம்ம்ம்,,,

"பூக்காரன் கவிதைகள்",,,, அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (21-Oct-15, 2:36 am)
பார்வை : 103

மேலே