பஞ்சம் இல்லா நாடு

பஞ்சம் இல்லா நாடாக
பாரத நாட்டை அமைத்திடுவோம்...
தஞ்சம் கேட்டு வருவோர்க்கு
தாராளமாய் இடம் தந்திடுவோம்!

அன்னை தந்தை நம்நாட்டில்
அணிய தேவைக்கு வெளிநாட்டில்
கற்கும் கல்விக்கு நம்நாடு
காசு பார்க்க வெளிநாடு!

கஞ்சி கூழு குடித்ததினால்
அஞ்சி ஓடுது நோய்கள்தான்
நஞ்சு மிகுந்த காய்கறிகள் - இன்று
விஞ்சி நிற்குது நோய்நோடிகல்தான்!

கம்பு கேழ்வரகு தினைமாவு
வரகு சாமை வென்சோளம்...
அரிசியை குறைத்து அகம்மகிழ்ந்து
அவசியம் உண்போம் சிருதானியம்!

கையில் அடங்கும் உலகத்தை
கணினி தருது மலிவாக
பையில் கரையும் பணம்நோட்டு
பதுங்கி கிடப்பது கள்ளநோட்டு!

சுற்று சூழல் கேடினாலே
சுகத்தை இழ்க்கின்றோம் மாசினாலே...
கற்பதைப் போன்று நடந்துவிட்டால்
கவலையை ஒழித்து வாழ்ந்திடலாம்!

வயல்களில் குறையுது வெள்ளாமை
வாழ்க்கையில் ஒலிருது நில்லாமை.
வளத்தை குறைப்பது இல்லாமை
வசந்தத்தை தருவது பேராண்மை!

உலகம் வெப்பம் ஆவதினால்
உயர்வது நோய்கள் மட்டுமல்ல
கலகம் செய்து வாழ்பவர்கள்
களத்தில் ஒருநாள் வீழ்வார்கள்!

செல்லே இல்லா உயிரினமும்
செயல்பட வைப்பது நம்மினம்தான்
செல்லில் வீரம் பேசுவதால்
செல்லில் பணம்தான் குறைந்திடுமே!

ஆடுகள் மாடுகள் கோழிகளை
அறுத்து உணவை சமைக்கின்றோம்
நாடுகள் தோறும் இதுஎன்றால்
நாளை கால்நடைகள் அழிந்திடுமே!





எழுதியவர் : ரவி ஸ்ரீனிவாசன் (21-Oct-15, 3:31 pm)
Tanglish : pancham illaa naadu
பார்வை : 169

மேலே