ராட்சஸி

பகல் முழுக்க
சிடு சிடுத்து விட்டு
குடும்பமே அமர்ந்திருக்கும்
இரவு உணவில் எங்கிருந்தேனும்
மெல்ல பார்த்து புன்னகைத்து விடும் நீ
ரகசியங்களின் ராட்சஸி...
-----------------------------------------------------------------------

ஓரப் பார்வைக்குள் அர்த்தம்
வைத்து ஒவ்வொரு இரவையும்
நீயே ஆரம்பிக்கிறாய்...
------------------------------------------------------------------------

கோபங்களையெல்லாம்
முத்தங்களாக்க
உன்னால் மட்டுமே முடிகிறது...
------------------------------------------------------------------------

பச்சை தேநீர்க்குள்ளும்
இனிப்பு சேர்க்கிறாய், முதல்
ஒரு வாய் குடித்து...
-------------------------------------------------------------------------

'போங்க அத்தை வந்தர்றேன்..." என்று
எதையோ தேடுவது போல
வீட்டுக்குள் வந்து
இரண்டு நிமிட தழுவல்களோடு
தலை கலைந்தே செல்கிறாய்
சந்தைக்கு....
---------------------------------------------------------------------------

கதவு நிலவில் கைவைத்து
உருட்டிய விழிகளுடன்
நீ மிரட்டும் அழகைக் காணவே
எப்போதேனும்
தாமதமாக வருகிறேன்...
-----------------------------------------------------------------------------

அவசரமாய் செல்லும்
நாளில் உன்னைக் கும்பிட்டே
ஓடி விடுகிறேன்
புன்னகைக்கும் கடவுளாகி விடுகிறாய்
நீ...
------------------------------------------------------------------------------
கவிஜி

எழுதியவர் : கவிஜி (21-Oct-15, 5:07 pm)
பார்வை : 332

மேலே