ஆயித பூஜை
அவரவர் தொழிலுக்கு பேருதவிப்புரியும்
ஆயிதங்களுக்கு அபிஷேக ஆராதனை..!
ஆண்டுக்கு ஒருமுறை என்பதால்
அவரவர் சக்திக்கேற்ற ஆயிதபூஜை..!
பொரிகடலையில் தொடங்கி
இனிப்பு காரங்கள் வரை
ஐவகை பழங்களுடன்
தலைவாழைஇலை படையல்..!
வாழை மா தென்னைத் தோரணம்
கலர் காகிதங்களால் அலங்காரம்
சாம்பிராணியின் புகை மண்டலம்
கற்பூர தீபத்தின் ஒளி குண்டம்
திர்ஷ்ட்டி கழிப்பதாய்
தெருவெங்கும் பூசணிக்காய்களின் ரத்தக்களம்
சிதறு தேங்காய்களின் அமர்க்களம்
எலுமிச்சை பழங்களின் தீர்த்த வாரி..!
நவராத்திரி விழாவின் ஆரம்பம்
கொலு பொம்மைகள் வீற்றிருக்கும் வீடுகள்
நெய்வேதம் செய்த திண்பண்டங்கள்
வீடுதேடி வருவோருக்கு நிச்சயம் உண்டு..!
ஒன்பது நாள் கொண்டாட்டத்தில்
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சாத்துப்புடி
ஒரு தெய்வத்திற்கு மூன்றுநாள் கணக்குப்ப்டி
மூன்று தெய்வத்திற்கு ஒன்பதுநாள் மண்டகப்படி
இந்துக்களின் கலாச்சாரத்தோடு
அய்க்கியமாக்கிவிட்ட
இதுப்போன்ற விழாக்கள்தான்
இந்தியாவின் மாண்பை
அகிலமெங்கிலும் பறைசாற்றுகின்றன.
மூட நம்பிக்கையில் முழ்கிப்போனவன்
இந்தியன் என்றாலும்
தன் நம்பிக்கையில் இந்தியனை வெல்ல
எந்த அன்னியனாலும் முடிவதில்லை…
ஆயிதங்களை தவறாக கையாலதவரை
ஆயிதங்களுக்கான ஆயித பூஜைகள்
அனைவருக்குமான ஆனந்த பூஜைதான்..!
ஆண்டவனுக்கும் அதுதான் ஆசையாம்..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
