தமிழ் மொழி
தமிழின் ஆழம் கண்டார் இல்லை
தமிழின் நீளம் அளந்தார் இல்லை
காலம் பல கண்ட போதும்
காலன் கொல்லாப் பெருந்தமிழ் என் தாய்த் தமிழ்
வீழ்வோம் என்று மனதில் நினைத்தாயோ
உனை விடுத்து வாழ்வோம் என்று தவித்தாயோ
நீ தழைக்க உதிரம் கொட்டுவோம் என்று மறந்தாயோ
மாள்வோம் எனினும் உனை புகழ்துரைத்தே மாள்வோம்
பண்ணெடுத்துப் பாடிய புலவர் பலபேர் - அதைக்கேட்டு
பொற்பாதம் எடுத்து நடனமாடிய நாயகர் நடராஜர்
திக்கெட்டும் புகழ் பெற்ற பாலன் - முருகனை
சொற்சுவை ததும்ப வாழ்த்திப் பாடிய பாவலர் நக்கீரர்
சங்கம் கட்டிக் காத்த தமிழ் - சிலநாள்
பங்கம் எட்டிப் பார்த்துவிட்டது - ஒருநாள்
சிந்திச் சிதறிய மணிச்சரம் - இனி வரும்நாள்
நிச்சயம் ஓங்கி உயரும் எங்கள் தமிழ்க்கரம்