வாழ்கை பிழம்புகள்

கண் விழிப்பு !

வெளிச்சம் போட்ட இரவுகளை
விற்றது காதல்! கவிதையாக!
கரி பூசை வெள்ளை தாள்களில்!

மரணம்!

சுவாசித்தும் நித்தம்
மரணம் காதலில்!

தேடல்!

மாலை (மாலை)
பூத்த மலரிலும்
வண்டுகள் மொய்க்கும் தேன்!

ஆனந்தம்!

அணைத்தேன்
ஆனந்தம் நெஞ்சோடு!
உன்னை அல்ல! என் மகனை!
அணைத்தேன்!
நீ யெல்லா நேரங்கல்லை!
பெறந்தது ஆனந்தம் நெஞ்சோடு! கவிதையாக !
புல்லாங்குழல்!

மன சோகங்களுக்கு தூபம் போடும் ஊதுகுழல்!
கண் இல்லாமல் கண்ணீர் கோர்க்கும்
முங்கில் காடு!

தோல்வி!

இதயத்தின் கீறல்களுக்கு கண்ணீரால் மட்டும் முகம் கலுவிகொள்ளும்
முயற்சி!

வையம்!

மரணகளின் சமன்பாட்டில்
மறிக்க பெறந்த மானுடம்!

நம்பிக்கை!

நண்பா
மனதுள் மட்டும்
நட்டுவிடு நாற்றை இன்று!
முளைத்துக் கொள்கிறேன்
இன்றே!

இறைவன்!

பிறpபிலும் ! இறpபிலும்!
மண்டு கிடகிறன் மா மனிதன் உலகில்!

ஆசை!

விருப்பமில்லா மனைவியை கூட
விருபத்தோடு தொட்டு விடதே!
அது கண்ணகியை நீ தொட்டதுக்கு சமம்!
பற்றி எரிய உன்னை தவற யென்னொரு மதுரை இல்லை!

எழுதியவர் : கோவி நாகராஜன் (22-Oct-15, 3:09 pm)
பார்வை : 111

மேலே