பிடிவாத முத்தம்

முத்தம்....
அன்பின் வெளிப்பாடு...!
ஆதலால்,
அவள் மீதான எனது காதலை
வெளிகாட்டும் எண்ணத்தில்,
அவளுக்கு பிடிக்காது - எனத்
தெரிந்திருந்தும்
பிடிவாதமாக முத்தமிட்டேன்
அவள் கன்னத்தில்...!
ஆனால் அவளோ
என்மீது கொண்ட கோபத்தால்
அவள் செந்தாமரை விரல்களால்
என்னை அடித்துவிட்டால்..!
அவள் கோபமே
என்னை கொன்றது..!
எனினும்,
அவள் கைகள்
என்னை தீண்டியதால்
இந்த மரணமும்
எனக்கு சுகமே..!
- ஒரு தலை காதலுடன் கொசு...!

எழுதியவர் : காயத்ரிசேகர் (22-Oct-15, 7:44 pm)
பார்வை : 137

மேலே