ஏழ்மை எனும் வலியே

ஏழ்மை எனும் வலியே...
விலகிச் செல்லு வெளியே!
கோடி மக்கள் பசியிலே
ஏழ்மை எனும் வலியிலே!

மக்கள் தொகை மிகுதியில்
மாறிப் போச்சு தொகுதியில்!
உணவுப் பெருக்கம் பெருக்கல...
ஊர் முழுக்க பசியில...!

கற்க கல்வி கனவிலே
காலம் போச்சு அழிவிலே
உற்ற துணை உறவிலே
உறங்குது மனம் பசியிலே!

சொட்டு நீரும் அடியிலே
குறைஞ்சு போச்சு மணலிலே!
தாகம் தீர வழியில்லே
தாழ்மை குணம் குறையிலே..!

விளையும் பயிர் கருகுது
விளைந்த நெல்லும் குறையுது
விரைந்து வரும் மாசினால்
விளைவதோ நிறைய நோயினால்!

பெண்ணைக் கொள்வர் கருவிலே -ஏழை
அன்னையரின் மனம் நெகிழ்விலே!
உன்னில் குற்றம் ஆயிரம்
உலகதிருக்கு தெரியாமலா போயிரும்!

உறவுக் கூடம் விலகுது
ஊர் கூட ஒதுக்குது!
வலியில் நிறைந்த மனதுகூட
வாழ்க்கை யெதுக்குஎன்று தோணுது!

ஒரு வேலை உணவிற்கும்
ஒதுங்க வேண்டும் ஓரத்தில்
எச்சில் இலையில் நிறைந்தசோறு
எனக்கு கிடைப்பதோ தூரத்தில்!

தேகதிருக்கு ஒற்றை உடை
தேடினாலும் கிடைக்காது மாற்றுஉடை
தேவதைப்போல் நங்கள் மிளிர
தெய்வத்திற்கும் மனது இரங்கல!

ஏழ்மை எனும் வலியே
விலகிச் செல்லு வெளியே!
விரைந்து வந்து உதவும்க்கூட்டம்
விழிக்க வேண்டும் மக்கள்கூட்டம்!

எழுதியவர் : ரவி ஸ்ரீனிவாசன் (23-Oct-15, 3:37 pm)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
பார்வை : 103

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே