ஜி .யு.போப்

போப்!

நீ ,பிறந்தாய் நோவ ஸ்காட்டில் -ஆனால்
வளர்ந்தாய் தமிழ் தாயின் ,தொட்டில் தாலாட்டில்

நீ ,எதற்கு இங்கு வந்தாய் !
உன் மதம் பரப்பவா?-இல்லை
தமிழ் மனம் பரப்பவா ?

போப்பாரே !

உன்னை தமிழ் தாய்,
மாற்றன் பிள்ளையாக பார்க்கவில்லை -ஆனால்
தன் மானம் காத்த மகனாகவே பார்க்கிறாள் !

வட மொழி ,
பிற மொழி,
அண்டை மொழி என ,
எல்லா மொழியும் வந்தன !

தமிழ் மொழியை -ஒரு
கை பார்க்க நினைத்தன !

வந்தார் போப் ,
தந்தார் -ஒரு
பெரிய ஹோப் !

நம் மொழியை ,பிரிக்க நினைத்த திட்டங்களை எல்லாம் பெயர்த்து எடுத்தார் ! - அதோடு

தமிழ் மொழி ,நூல்களை எல்லாம் -பிற
மொழிகளுக்கு பெயர்த்து தந்தார் !-அதனால்

தமிழ் பொதுமறை ,
உலக பொது மறை ஆனாது !

புறநானுறு ,
உலகம் போற்றும்
புத்தகமானது !

"நீ திருவாசகம் படித்தாய் -அதன்பின்
நான் ,ஒரு வாசகமும் படியேன் என்றாய் அன்றுமுதல் ,
நான் தமிழ் மொழிக்கு அடியேன் என்றாய் "

போப்பே !
உன்னை ,எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியும்மா ?
வானம் அளவுக்கு பிடிக்காது !
கடலின் ஆழம் வரைக்கும் பிடிக்காது !-ஆனால்

உன் கல்லறை வரை ,
என்னக்கு பிடிக்கும் -அப்பொழுது கூட
ஒரு தமிழ் மானாவன்னாய் தான்,
அங்கு உறங்கினாய்!

போப்பே !
நீ தான் உண்மையில்
போப் ஆண்டவர் !-இல்லை
தமிழ்மொழியின் ஒப்பற்ற
போப் ஆண்டவர் !!!!!!!!!!!!!!!!!!!






எழுதியவர் : பா.கபிலன் (5-Jun-11, 11:59 am)
பார்வை : 1129

மேலே