உனைப் பார்த்த பின்பு நான்

உன் திருமணத்திற்குப் பிறகு
ஒரு முறையும்
என் திருமணத்திற்குப் பிறகு
ஒரு முறையும்
உன்னைப் பார்த்தேன் .

நீ பார்க்கவில்லை என்று தான்
நினைக்கிறேன் .
பார்த்துவிட்டுப் , பார்க்காததுபோல்
போனாயோ ? தெரியவில்லை .

நேருக்கு நேர் பார்த்திருந்தால்
நீ என்ன பேசி இருக்கக்கூடும் .
பேச்சைத் தவிர்க்க
சின்னச் சிரிப்போடு கூட
விலகிப் போயிருக்கலாம் .

பார்த்து , பழயதை மறந்து , மறைத்து
பழயதை நினைத்து
தடுமாற , தட்டுண்டு
சங்கடத்தோடு தான்
மீண்டும் பிரிந்திருக்க
நேரிடும் .

பார்த்தும் , பார்க்காமலேயோ
பார்க்காமலே
போனது நல்லது தான் .

எழுதியவர் : கனவுதாசன் (26-Oct-15, 2:21 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 101

மேலே