பேன்ட் பெல்டை விட சீட் பெல்ட் முக்கியமுங்க…

பேன்ட் பெல்டை விட சீட் பெல்ட் முக்கியமுங்க…
--------------
இளைஞர்கள் பெரும்பாலும் தங்களது பேன்ட் பெல்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை காரின் சீட் பெல்டுக்குக் கொடுப்பதில்லை.

அமெரிக்காவில் நடக்கும் விபத்துக்களில் மட்டும் ஓராண்டுக்கு சுமார் 13,000 உயிர்களை சீட் பெல்டுகள் காப்பாற்றுவதாகக் கூறப்படுகிறது. அதில்லாமல், விபத்துக்களில் உயிரிழக்கும் பெரும்பாலானவர்கள் சீட் பெல்ட் அணியாததால் உயிரிழந்தவர்களாக இருக்கிறார்கள். இதில் இருந்தே கார் பயணத்தின போது சீட் பெல்ட் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர முடியும்.

சரி நாம நம்ம ஊருக்கு வருவோம்.

கார் விபத்தில் சிக்குபவர்களில் படுகாயம் அல்லது மரணம் அடைவதை சீட் பெல்டுகள் நிச்சயம் தடுக்கின்றன என்பதில் எந்த ஐயமும் இல்லை. மிக மோசமான விபத்தில் சிக்கினாலும், நீங்கள் உயிர் தப்பிப்பதற்கான வாய்ப்பை சீட் பெல்டுகள் ஏற்படுத்துகின்றன.

நிபுணர்களின் ஆய்வில், கார் விபத்துகளில் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மரணம் அடைவதை 50 விழுக்காடு வாய்ப்பினை சீட் பெல்டுகள் குறைக்கின்றன.

கார் பயணத்தின் போது மரணமா அல்லது வாழ்வா என்ற மிகப்பெரிய மாற்றத்தை அந்த சிறிய சீட்பெல்ட் எப்படி நிகழ்த்துகிறது என்பதை பார்ப்போம்.

அதாவது, கார் இருக்கையில் அமர்ந்து கொண்டு சீட் பெல்ட்டை போட்டுக் கொள்கிறீர்கள். பிறகு கார் 50 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. திடீரென உங்கள் காரின் ஓட்டம் எதிர் வினையால் தடுக்கப்படும் போது, தானாகவே உங்கள் உடல் அதே 50 கி.மீ. வேகத்தில் முன்னோக்கி பயணிக்கும். இதனால்தான் பெரும்பாலான விபத்துகளில், தூக்கி வீசப்பட்டு மரணம் என்ற நிகழ்வு ஏற்படுகிறது.

இந்த சமயத்தில், எதிர்வினையால் உங்கள் கார் நிறுத்தப்படும் போது நீங்கள் தூக்கி வீசப்படுவதை சீட் பெல்ட் தடுத்துவிடும். அதே சமயம், உங்கள் காரில் உள்ள காற்றுப் பைகள் விரிவடைந்து உங்களை நிச்சயம் காயமடைவதில் இருந்து காக்கும்.

சீட் பெல்ட் அணிந்திருந்தால், மிக மோசமான விபத்துக்களில் இருந்து கூட தப்பிக்க முடியும் என்கிறது நிபுணர்களின் கூற்று. ஆனால், வேறு விதமான விபத்துக்களால் அதாவது பின்புறமிருந்து வாகனம் நசுக்கப்படும் போது படுகாயங்களோ அல்லது உயிர் இழப்போ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

காரை ஓட்டுபவர்கள் மட்டும் இல்லை, முன் இருக்கையில் அமரும் யாரும் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டியது அவசியம்.

சிலர் பக்கத்தில் இருக்கும் இடத்துக்குத் தானே செல்கிறோம் என்று சீட் பெல்ட்டை அலசியப்படுத்துகிறார்கள். விபத்து என்பது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எனவே எப்போதுமே சீட் பெல்ட் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடன் பயணிக்கும் நபர்களுக்கும் அதனை வலியுறுத்துங்கள்.

பேன்ட் பெல்ட்டை போடவில்லை என்றால் அரைஞான் கயிறு…
சீட் பெல்ட் போடவில்லை என்றால் அன்றைக்கே கயிறு…

இது எதற்கும் வருத்தப்படாத வாலிபர்களின் சங்கம் சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூறும் வாக்கு…

வாணிஸ்ரீ சிவகுமார் -

எழுதியவர் : முகநூல் (27-Oct-15, 11:51 am)
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே