முனிவரும் காக்கை குஞ்சுகளும்

கட்டு கோப்பான உடல் நீண்ட நெற்றி நிறைய பட்டை, பெரும் ஜடா முடி இவர் தான் சூரிய நாராயண முனிவர்,

முனிவர் கடவுளிடம் வரம் வேண்டி காய்ந்த மரத்தின் அடியில் தவம் செய்ய ஆரம்பித்தார், வெயில், மழை, குளிர், சூறாவளிகளை எல்லாம் கடந்து, உணவு உட்கொள்ளாமல், தண்ணீர் அருந்தாமல் பல வருடங்களாக தொடர்ந்து தவத்திலேயே இருந்தார்,

அவரது ஜடா முடி தலையில் ஒரு ஆண் காக்கையும், பெண் காக்கையும் ஒன்றாக கூடு கட்டி வாழ்ந்து வந்தது,

அப்பொழுது தான் முனிவரின் தவ வலிமையை கண்டு கடவுள் அவர் முன்னே தோன்றி நீ இனி தவத்தை கலைத்து கொள், உன் தவ வலிமையை கண்டு நான் வியந்து போனேன் வேண்டிய வரம் கேள் நான் தருகிறேன் என்றார், ஆனால் முனிவர் தவத்தை கலைக்க மறுத்து தவத்திலேயே இருந்தார்,

இரு மாதங்கள் கடந்தது மறுபடியும் கடவுள் அவர் முன்னே தோன்றி நீ வேண்டிய வரம் கேள் என்றார், இப்பொழுதும் முனிவர் தவத்தை கலைக்க மறுத்து தவத்திலேயே இருந்தார்

மூன்று மாதங்கள் ஆனது கடவுள் முனிவர் முன் தோன்றினார், அப்பொழுது முனிவர் தவத்தை கலைத்து மெதுவாக கண்ணை திறந்து கடவுளை வணங்கினார், அப்பொழுது கடவுள் கேட்டார் நான் இரு முறை உன்னை அழைத்த போது நீ ஏன் தவத்தை கலைக்க மறுத்தாய், இப்பொழுது மட்டும் எதற்காக நீ கண் திறந்தாய் என்று கேட்டார்,

அதற்கு முனிவர் நீங்கள் முதல் முறை வந்த போது என் தலையில் காக்கை கூடு கட்டி அதில் முட்டைகள் ஈன்றிருந்தது நான் சற்று சிறு அசைவை ஏற்படுத்தியிருந்தாலும் கூட முட்டைகள் கீழே விழுந்து உடைத்து இருக்கும், தாங்கள் இரண்டாவது முறை வந்த போது முட்டைகள் உடைந்து குஞ்சுகள் வெளியே வந்திருந்தது, அப்பொழுது நான் அசைந்திருந்தால் குஞ்சுகள் கீழே வீழ்ந்து தாய் பறவையை விட்டு சென்று விலங்குகளுக்கு இறையாகியிருக்கும், ஆனால் இப்பொழுது குஞ்சுகள் சிறகுகள் விரித்து மகிழ்வோடு தாய் பறவையுடன் சேர்த்து ஆகாயம் நோக்கி பறக்கிறது இதுவே காரணம் என்றார்,

முனிவரின் தவ வலிமை மட்டுமல்லாமல் அவரின் அன்பினையும் கண்டு கடவுள் முனிவரை தன்னுடனே இணைத்துக் கொண்டார்

எழுதியவர் : விக்னேஷ் (27-Oct-15, 12:18 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 175

மேலே