அவள்
அவள் நிழல்
என் நகல் ..
அவள் குரல் ..
வார்த்தை ஊடல் ..
அவள் கயல்
என் கடல் ..
அவள் பாறை
நான் உளி ..
அவள் காதல்
என் தேடல் ..
அவள் விரல்கள்
மெல்லிய ஸ்வரங்கள் ..
அவள் ஸ்பரிசம்
என் கலசம் .
அவள் கூந்தல்
நான் தொலைந்த காடு ..
அவள் உதடு
பருவத்தின் சுவடு ..
அவள் இடை
சின்னச்சிறு ஓடை ..
அவளின் அழகு
அவனின் கொடை....!