இவ்வளவு தான் வாழ்க்கை

உன்னை மறந்து
நீ சிரித்தால்
உவகையும் சந்தோசமும்!

உலகை மறந்து
நீ ரசித்தால்
போதையும் மயக்கமும்!

உடல்
களைப்பிலிருந்து மீள
ஒய்வு,

மனம்
தவிப்பிலிருந்து மீள
புணர்வு.

கவலைகளை மறக்க
கடவுள் கொடுத்த அற்புத வரம்
உறக்கம் ...

அதுபோல
கஷ்டங்களை தாங்க
நம்பிக்கை,

துன்பங்களை மறக்க
காத்திருக்கும் காலம்...
(இதுவும் கடந்து போகும்..)

இவ்வளவு தான் வாழ்க்கை !

எழுதியவர் : செல்வமணி (29-Oct-15, 12:24 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 256

மேலே