‎மனைவி‬

ஒவ்வொரு நாளும்,
நீ எனக்காக எழுவாய்...
எத்தனை நாள்,
உனக்காக நான் எழுந்தேன்...?
ஒவ்வொரு நாளும்,
நீ எனக்காக சமைப்பாய்...
எத்தனை நாள்,
உனக்காக நான் சமைத்தேன்...?
ஒவ்வொரு நாளும்,
நீ எனக்காக விழித்திருப்பாய்...
எத்தனை நாள்,
உனக்காக நான் விழித்திருந்தேன்...?
நீ சிரித்தால் மட்டும் தானே,
என்னாலும் சிரிக்க முடிகிறது...
நீ இல்லாத வீடு கூட,
விரிச்சோடி தானே கிடக்கும்...
வியப்பாக தான் இருக்கிறது,
தாய்மை கலந்த உன் அன்பு...
‪#‎மனைவி‬

எழுதியவர் : பதிவு : செல்வமணி (29-Oct-15, 12:45 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 327

மேலே