உடன்பாடு
எதிர்ப்படும்
எதுவுமே
இடர்ப்பாடு
முரண்பாடு
இல்லாதவரை
தலைப்படு.
உடன்பாடு
இல்லாது போகையில்
உடன்பட
விளைந்திடு
வளைந்து கொடு
இல்லை
வசைப்படுத்த
வார்த்தையிடு
வார்த்தை கொடு, எடு
வந்துவிடும்
உடன்பாடு.
இதுவே
வாழ்வின்
வாய்ப்பாடு...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
