கல்லூரிப் பாடல்

..........................................................................................................................................................................................
எங்கள் மருத்துவக் கல்லூரியின் பாரம்பரியப் பாடல் இது. ஆண்கள் தனியாக, பெண்கள் தனியாக அணி சேர்ந்து ஒவ்வொருத்தர் பெயரை வைத்துக் கலாய்க்கும் பாடல். இரு பாலாருக்கும் நான்தான் வரியெழுதிக் கொடுப்பேன். ஹாஸ்டல் வந்த பிறகு சகமாணவிகளிடமிருந்து மொத்து கிடைக்கும்... !

ஆண்கள்:
மந்தைவெளி மானாமதுரை
மச்சான் ஓட்டுறது வெள்ளைக் குதிரை
சந்துபொந்து போகணும் உள்ள- மேல
சரக்கில்லாம ஆடுது புள்ள.. (மந்தைவெளி)

பெண்கள் :
மந்தைவெளி மானாமதுரை
மச்சி ஓட்டுறது வெள்ளைக் குதிரை
சந்துபொந்து போகணும் உள்ள - மேல
சரக்கில்லாம ஆடுது புள்ள.. (மந்தைவெளி)

ஆண்கள்:
அந்தப் பக்கம் போடுவாங்க ஊசி – அந்த
ஊசி போடுற பொண்ணு பேரு ரோசி..

ரோசி போட்ற ஊசி வேணுமா..- இல்லே
ஊசி போட்ற ரோசி வேணுமா..?

ஊசி வேணாம் ஒண்ணும் வேணாம் டோய்.. - அந்த
ஊசி போட்ற ரோசி வேணும் டோய்..! (மந்தைவெளி)

பெண்கள் :
இருட்டுக் கடையில் விக்குதய்யா அல்வா..- அந்த
அல்வா விக்கிற பையன் பேரு செல்வா..!

அல்வா விக்கிற செல்வா வேணுமா.. – இல்லே
செல்வா விக்கிற அல்வா வேணுமா..?

செல்வா வேணாம் எவனும் வேணாண்டீ.... – அந்த
செல்வா விக்கிற அல்வா வேணுண்டீ..! (மந்தைவெளி)

(இப்படியாகப் பாடல் தொடரும்..)

எழுதியவர் : அருணை ஜெயசீலி (29-Oct-15, 1:04 pm)
பார்வை : 81

மேலே