எழுத்து

எண்ணங்களே எழுத்தாகும்,
எழுத்துகளே ஏட்டாகும் ,
ஏட்டில் தோன்றியவை பாடமாகும் ,
பாடமே பகுத்தறிவாகும்
பகுத்தறிவே பின்பு பண்பாகும்
பண்பே மனிதனின் தனித்துவம்
கவிங்கனுக்கு எழுத்துகளே முகாந்திரம்
கவிதையோ எழுத்துகளின் அலங்கார தோரணம்
அவற்றில் கூடாது ஆணவத்தின் கூடாரம்