புரியாத பிரியம்

உயிரே..

உன்னைக் காணாது
கண்ணீராய் கரையும்
என் கண்களைக்
காணவேனும் வருவாயா..??

உன்னிடம் பேசாது
பேசுவதைப் போல்
பாவித்து பரிதவிக்கும்
என் மனதிடம்
அதட்டியேனும் பேசுவாயா..??

அன்பே..
என் அன்பை
பிரிந்தபிறகேனும்
புரிந்துகொள்..!!

என் விரல்படும் தூரத்தில்
நீ இருக்க வேண்டுமென்ற
அவசியம் இல்லை..!!

என் விழிபடும் தூரத்திலும்
எனக்கு விடை தரும் தூரத்திலும்
நீ இருந்தால் போதுமம்மா..!!!

நாம் இருவரும்
இணைபிரியாமல்
விடைபெறுவோம்
என்பதில் ஐயமில்லை..!!!

எழுதியவர் : பகவதி லட்சுமி (29-Oct-15, 10:14 pm)
Tanglish : puriyaatha piriyam
பார்வை : 689

மேலே