துன்ப சதைகள்

காலிழந்தோரும் கசியாதிருப்பார்,
சிறு முள்ளை ஏந்தியோரோ கடவுளை ஏசுவாரே...

பெருந்தணலில் வெந்து மடிந்தவர் இருக்க ,சிறு தீ பொறிக்கஞ்சிடும் மறவர் இங்கிருப்பாரே...

ஒரு வேளை உண்டிக்கு தவமிருப்போர் உண்டு,
செறியாமல் அதன் மேலும் உணவு கொள்வோரும் உண்டு..

நல் சோற்றை காணாது,
நல் உடுப்பு கொள்ளாது,
கால்,கை இழுக்கு கொண்டு,
கண் திரை செய்யாது,
வாய் மொழி உரைக்காது,
உடம்பதில் ஓர் கோடி ஊண் கொண்டு,

துன்பத்தில் கருகி இருப்போர் பல பல

இறைவா நீ என் நிலை கண்டு குலையாதே..!

நேர் சென்று அவர்களுக்கு துன்பமும்,மரணமும் கொள்ளும் பக்குவம் கொடு...

எனக்கு சுமைகளை தாங்கும் நல் தோள்களுண்டு

உந்தன் விசித்திர உண்மையை நாளும் உணர்வேன்

நில்லாது செல் அவர்கள் துன்பத்தை ஆற்று..

எழுதியவர் : சிவசங்கர்.சி (30-Oct-15, 10:30 am)
சேர்த்தது : சங்கர்சிவகுமார்
பார்வை : 111

மேலே