பசி
ஏழை இந்த பேதையவள்
நாலெல்லாம் உழைச்சுவந்தேன்
போதுமான பணம் இருக்கே
பத்து நாளும் அரைவயிறு சாப்பிடலாம்
குழந்தைகளை சந்தோச படுத்திடலாம்
கை நிறைய பணத்துடனே
உழைச்சு களைச்ச களைப்புடனே
வீடு நோக்கி போகையிலே
வழி மறிச்சான் என் புருஷன்
மன்றாடி பார்த்திடினும்
குழந்தை பசி சொல்லிடினும்
இரக்கமில்ல மனுசனவன் மதுகடை
நோக்கிடவே
இனி எதிர்காவம் சூனியமா
ஏன் முளைத்தாய் மதுகடையே
உனக்குமா இரக்கமில்லை
குழந்தை பசி புரியலையா
என் வாழ்வெங்கே சென்றிடுமோ
பிஞ்சுகளும் வாழ்ந்திடுமோ
இனி பிளாட்பாரம் என் வாழ்கைதானா
குழந்தைகள் கையேந்தும் அவலம் தானா
என் வாழ்வே மரணத்தை நோக்கிதானா
மது என்ற அரக்கனாலே