காலமெல்லாம் காத்திருப்பேன்

இனம் புரியா வயதினிலே
என் மனம் நுழைந்த என்னவனே
தினம் என் பின்னே சுற்றிவந்து
என் உள்ளத்தை நிறைத்துவிட்டு
கொள்ளை போக பாசம் வைத்தாய்
நானும் மறக்கமுடியா பாசம் வைச்சேன்
உள்ளத்திலே கோவில் கட்டி
என் கருவறையில் உன்னை குடியும் வைச்சேன்
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற
உண்மையான நெறிமுறைதான்
நீயோ கடவுளை உதராணமாய் எடுத்து சொன்னா
எல்வா கடவுளுமே
இருதாரம் கொண்டவராம்
இன்னொருத்தி கிடைச்சிடட்டும்
கருவறையில் குடிவருவேனென்றாய்
கடவுளோட காதலுமே எனக்கு புரியாத மர்மம் தானே
ஆனாலும் அந்த தேவி போல மனம் மாறா பேதை நானே
என் நெஞ்சிலேதான் நீ இருக்கே
நீ குடியேற
காலமெல்லாம் காத்திருப்பேன்
கண்ணனை எண்ணிவாழும்
மீரா போல

எழுதியவர் : செல்வம் சௌம்யா (31-Oct-15, 9:17 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 178

மேலே