வெற்றி நிச்சயம் - ஆனந்தி

எண்ணம் சிந்தனை
செயல்
மூன்றையும் ஒரே
நேர்க்கோட்டில் வை....
வானம் மட்டுமல்ல
எல்லாமே வசப்படும் - நீ
நினைத்தால் மட்டும்
வெற்றி சுகப்படும்....
மனதை முதலில் வெல்
வாழ்வையும் வெல்வாய்.....
பிறரை ஏன் குறை கூறுகிறாய்
உனக்குள் இருக்கும் மகா சக்தி
அறியாது....
தோல்விகளை துவம்சம் செய் - உன் மனம் முதலில் உன்னை
நம்பட்டும்....
பிரபஞ்ச வெளியையே
புரட்டி போடலாம் - இந்த
உலகத்தையே திரும்பி
பார்த்திட செய்யலாம்.....
நம்பிக்கையோடு இரு
நாளை மட்டுமல்ல
இன்றும்,
இந்நொடியும் நமதே.....