பாரதீ - ஆனந்தி

பார'தீ'
தமிழ் கவிதைகளின் சார'தீ' நீ...
புனித மனிதம் பாட வந்த
புரட்சி தீ நீ...

பாடல்களினாலேயே
சாதியை சுட்டெரித்த சூரியன் நீ...
சுதந்திரத்திற்கு ஆணி வேர் இட்டவன் நீ...

உலகத்தரத்தில் தமிழை
கொண்டு சேர்த்தவன் நீ...
புது கவிதைகளின் உதயம் நீ...
பெண்மையை பொக்கிஷமாய்
போற்றியவன் நீ...

தமிழன்னையின் பேர்
சொல்லும் பிள்ளை நீ...
இலக்கிய உலகின் இமயம் நீ...
புகழிலும் இளைத்தவன்
அல்ல நீ...

பலன் தேடா பொதுமை
விரும்பி நீ...
புரட்சி மடை திறந்தவன் நீ...
தேசம் மீட்க பாடியவன் நீ...

முறுக்கு மீசையின்
பிறப்பிடம் நீ....
கற்பனைகளின் இருப்பிடம் நீ
மகாகவியே ....வாழ்க நும் புகழ்
வானம் போலவே என்றும்.....

எழுதியவர் : ஆனந்தி.ரா (31-Oct-15, 6:34 pm)
பார்வை : 189

மேலே