மின்னலுக்கு தங்கை
புன்னகை செய்து புதிர் போட்டாய்
கண்மலர் கொண்டு கனவுகள் தொடுத்தாய்
உன்குரல் கேட்டே கவி வடித்தேன்
உன்முகம் நினைத்தே கண்விழித்தேன்
உதிரத்தின் அணுவிலும் இடம்பிடித்தாய்
உள்ளத்துள் புது உலகம் நீ படைத்தை
உன் உள்ளம் நுழைய ஆசையடி
இந்த உலகம் உன்னால் தூசியடி
நீ
வான்மதிக்கு போட்டியடி
உன் புன்னகை
மின்னலுக்கு தங்கையடி