சோளப்பொரி

உடம்பால் வாழின்
உயிராய் வாழ்வர்
திறம்பட மெய்ஞானம்
சேர்தல் எனினும் இலனினும்
உணவது வேண்டும்....

அதற்கு பயிர்கள் வேண்டும்
பயிர்களுக்கும்
உயிருள்ள மண்ணே
மிகுதியாய் வேண்டும்.

வளம் தந்த மண்ணனைத்தும்
பலவந்தமாய் காங்ரீட்டால்
மூடிபோட்டு மனிதனுக்கு
கூடமைத்து மாடியிலே
பயிர்வளர்க்க மாற்றுரைத்தல்

கண்களை புண்ணாக்கி
கண்ணாடியில் காட்சி பார்
அழகோ அழகு என்பது போலத்தானே..?

புசிக்க பிடி சோறிலாத
போழ்துதானே தோன்றும்?
வயல்முழுக்க வீடு,அதில்
மொட்டைமாடி விவசாயம் .....

" யானைக்கு சோளப்பொரி " என்பது.

எழுதியவர் : மின்கவி (1-Nov-15, 11:38 pm)
சேர்த்தது : மின்கவி
Tanglish : vivasaayam
பார்வை : 121

மேலே