நீயாகிய நான்- ஆனந்தி

விடைகள் இருந்தும்
கேள்வியானேன்....

தினம் தினம் கண்களில்
அணை உடைகிறது என்பதில்
அக்கறை இல்லை....

உனை நினைத்தே
தீயாய் கருகுது மனம்
(என்பதை மறுப்பதற்கில்லை)

உன் விசாரிப்புகளுக்காகவே
நீண்டு காத்திருக்கிறது(கிடக்கிறது)
என் பொழுதுகள்....

உன்னிடம் மட்டுமே
என் அளவற்ற
அன்பை பரிமாறி
காண்பவை யாவற்றிலும்
உன்னையே
பார்த்து கிடந்தேன்........

பிரிந்திட மனமில்லை- உனக்கு
புரிந்திட (வெகு)தூரமில்லை....

அவமானம் தாங்காமல்
உன் நினைவுகளை எறிய
முயலுவேன்
காத்திருந்த கோபத்தில்.
ஒவ்வொரு முறையும்
எனக்குள்ளே
எரிந்து தான் போவேன்....

எழுதியவர் : ஆனந்தி.ரா (2-Nov-15, 1:17 pm)
பார்வை : 620

மேலே