அம்மா

உவமை இல்லாத ஒரு ஜீவன் அம்மா
இறைவன் கூடத்தான் அவள் முன்னால் சும்மா
எங்கே நான் போனாலும்
எந்த கோட்டையை வென்றாலும்
உந்தன் காலில் தூசி நான்

உனக்கென்று ஒன்று வேண்டும் என்று
இதுவரை நீயும் கேட்கல
உனக்கிது வேண்டும் என்றுதான்
எனக்காய் எதுவும் தோனல
தாயே....
ஒரு பிள்ளையாய் இந்த வாழ்விலே
என்ன செய்தேனோ ஒன்னும் புரியல

எனக்கெல்லாம் நீயே.....

சோற்றுக்கு ஒரு குறையுமில்ல
ருசியில் பஞ்சம் கூட இல்ல
தாயே நீயும் புசித்தாயா
என்று கேட்க பிள்ளைக்கும் நேரமில்ல
தாயே....
வாழ்வில் தோல்விகள் காணும் போதெல்லாம்
வார்த்தைகள் இல்லா ஆறுதல் இங்கு
உந்தன் மடி ஒன்றுதான்.....

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (3-Nov-15, 7:12 pm)
Tanglish : amma
பார்வை : 249

மேலே