காதல்
காதல்-
வீடுகடந்தபின்னும்
வீதிக்காற்றில் மிதக்கும்
விருப்பப் பாடல்
காதல்-
தேடிச்சலித்துப் பதைத்து
இயலாமை அழுகையின்
முன் கணத்தில்
அம்மாஎன்றழைக்கும்
காலடிக்குழந்தை
காதல்-
நனையமறுத்து விரைந்தும்
நனைத்து சிரிக்கும்
அந்தி மழைத்துளி
காதல்-
இரவுக்குளிரின்
ஏக்க முகத்தின் முன்
எடுத்து நீட்டப்படும்
தேநீர்க் குவளை
காதல்-
கோலமிடும் போதும்
தாயின் தோளனைத்து
நிற்கும்
சினுங்கல் மழலை