தீபாவளித் திருநாள்
தீபாவளித் திருநாள்💥
""""""""""""""""""""""""""""""""""""""
எல்லோரும் புத்தாடை உடுத்துவாங்க...
எங்கு திரும்பினாலும் வெடிச்சத்தம்...
இரவானதும் வானவேடிக்கை...
அந்த வாரமே...
கல கலன்னு இருக்கும்....
எனக்கு வெடியென்றால்...
கொஞ்சம் பயம்...!
நிச்சயம் ஒருநாள்,
நானும் வெடி போடுவேன்...!!
பெரும்பாலும் வீடுகளில்...
முறுக்கு, தட்டையென அனைத்தும்,
சுடுவார்கள்...!
எனக்கு...
உளுந்த வடையில தேங்காய்...
சட்டினி தொட்டு சாப்பிட,
ரொம்ப பிடிக்கும்...!!
போன வருடம் வரைக்கும்,
தனியாக நான்...
எங்கேயும் சென்றதில்லை...!
இந்த வருடம்...
கிளம்பிவிட்டேன் தனியாக...!!
வீடு வீடாக சென்று...
பாத்திரமேந்தி...
மீதமிருக்கும் பண்டங்களை வாங்க..!!!
எனக்கு பிடித்த...
உளுந்தவடை தரும் அனைவருக்கும்...
என் இனிய...
தீபாவளி வாழ்த்துக்கள்...
இப்படிக்கு...
ஆறு வயது நாடோடிச்சிறுவன்.
இவண்
✒ க.முரளி (spark MRL K)