கொலைகளில் வாழ்வு
கொலைகளை
ரசிப்பதென்பது
பனிக்குமிழின்
சுவையறிதல்_போல்
அலாதியானது
இரக்கம் கசிந்தாலும்
நியதிகளென
விஞ்ஞானமூளை
விடைதருவதால்
கொலைகளை
தடுத்ததேயில்லை
விழிகளறிந்தவரை
கொலைகளுக்காக
அழுததில்லை_கண்ணீர்
சிந்தியதெல்லாம்
ரசனைப்பித்தில்
இமைக்க மறந்தபோது
இற்றைவரைக்கும்
கொலைகளை
ரசித்தேனே தவிர
கணக்கிட்டதில்லை
பொழுதுபோக்கில்
லாப நட்டமெதற்கு!
பூங்காவில்!
சமயலறையில்!
புதரில்!
கழிவறையில்!
கழிவுக்குழியில்!
இன்னும் ஏன்! _என்
கட்டிலறையில் கூட
கொலைகளை
ரசித்திருக்கிறேன்
சாட்சியமாய்
அழைக்கவில்லை
என்பதை பார்க்கிலும்
கொலைகளுக்காய்
வழக்கே நடந்ததில்லை
என்பதே சுவார்ஸ்யம்
கத்தி தீட்ட
கற்றதெல்லாம்
கொலைகளிலிருந்து
கொல்லாமலிருக்க
சொல்லித்தந்ததும்
கொலைகளே
மாலையிலிருந்து
ஒரு கொலை
மிகக்கொடூரமாக
நிகழ்கிறது!
எப்படியேனும்
இரவுக்குள்
பெருவண்டை
கொன்றுவிடும்!
சிலந்தி
சிலந்தியை
கொன்றுவிடும்
பல்லி!
இதற்க்காகவே
எனதறையில்
ஒட்டடை
தட்டப்பட்டதில்லை..
கொலைகளால்
இறப்புக்கள்
குறைக்கப்படுகின்றன