பழைய சைக்கிள்

பழைய சைக்கிள்🚲
""""""""""""""""""""""""""""""""
ஒரு ஊர்ல ஒரு...
அப்பா, அம்மா...

அவங்களுக்குன்னு பிறந்தது ஒரு,
ஆண் குழந்தை...

விவரம்...
தெரிய ஆரம்பிச்ச உடனே,
குழந்தைக்கு...

பள்ளிக்கு செல்ல...
மலிவா வந்த பழைய சைக்கிளை,
விலைக்கு வாங்கினார் அப்பா...!

குழந்தையின் அம்மா,
தன் கணவனிடம் சொல்லுவாள்...

"இப்ப இருக்குற கஷ்டத்து,
இது எதுக்குங்க"
என்று...

குழந்தையின் அப்பா,
தன் மனைவியிடம் சொல்லுவார்...

"நம்ம படுற கஷ்டத்த
நம்ம குழந்தையும் படக்கூடாதுடீன்னு"

குழந்தையின் பாட்டி,
தன் பேரனிடம் சொல்லும்...

"பாருடா... உங்க அப்பா...
உனக்கு இப்பவே...
முன்னூத்தி ஐம்பது ரூபாய்க்கு
சைக்கிள் வாங்கியிருக்காருன்னு...!"

பையன் வளர வளர...
குடும்பத்துல வசதியும் கொஞ்சம்,
வளர ஆரம்பிக்குது...!

வாடகை வீட்டிலிருந்து சொந்த,
வீட்டிற்கு செல்லும் நிலைவருகிறது...!!

இப்ப பையனுக்கு சைக்கிள் ஓட்ட,
முட்டி தட்டுது...!!!

அப்பாட்ட பெரிய சைக்கிள் கேக்குறான்..
இப்ப... அப்பா,
புது சைக்கிளே வாங்கித்தருகிறார்...!!

விற்க மனமின்றி பழைய சைக்கிள்,
வீட்டின் ஓரத்தில் முடங்கிக்கிடக்கிறது...!!!

வருடம் ஓடுகிறது...
சைக்கிளின் விலையும் ஏறுகிறது...
ஆனால்...
சைக்கிளின் பயன்பாடு குறைகிறது...!!

பழைய சைக்கிள்...
வீட்ட அடச்சிக்கிட்டு இருக்குன்னு...
அம்மா சொல்ல...!
அப்பாவும் தலையாட்ட...!!

சைக்கிளை விற்க...
ஊருக்குள்ள கஷ்டப்பட்டு ஒரு,
கடைய கண்டுபிடிச்சான் பையன்...!!!

கடைக்காரனிடம் விலைகேட்கிறான்...

கடைக்காரனோ...

"தம்பி இப்ப புதுசைக்கிள்,
நாலாயிரம், ஐயாயிரம் இருந்தாலும்...
பழைய சின்ன சைக்கிளை,
யாரும் விரும்பி வாங்குறதில்ல...

என்ன ஒரு...
முன்னுத்தைம்பது ரூபாய் தரலாம்...!!"

வந்த விலைக்கு விற்ற,
பையனிடம்...
வீட்டில் பாட்டி சொல்கிறாள்...

"ஏன்டா வெறும்...
முன்னுத்தைம்பது ரூபாய்க்கா வித்த...
கூட ஒரு நூறு ரூபாய் சேத்து,
கேக்கக்கூடாது...!
என்ன பிள்ளையோ போ...!!

பணத்தின் நிலை ஏறி இறங்குவதும்
பணமும் பொருளும்
கைமாறுவதும் மனிதனால்.

இவண்
✒க.முரளி (spark MRL K )

எழுதியவர் : க.முரளி (5-Nov-15, 12:45 am)
சேர்த்தது : க முரளி
Tanglish : pazhaiya saikkil
பார்வை : 194

மேலே