விலகிச்செல்லுங்கள்

மாரடைப்பால்
உயிர் ஊசலாடலாம்.
உறுப்பு சிதைந்து
சிகப்பு குருதி உறைந்து..
வலியில் துடிக்கும் ஒரு
உயிராகவும் இருக்கலாம்.!
பிரசவ வலியில்
கதறும் பெண்ணாகவும்
இருக்கலாம்..!

நீங்கள் விலகிச்சென்றுவிடுங்கள்.


ஆம்..
அன்புடையோரே
விலகி வழி கொடுங்கள்
ஆம்புலன்ஸ்க்கு..

எழுதியவர் : நிலாகண்ணன் (5-Nov-15, 9:09 am)
பார்வை : 100

மேலே