ராத்திரி நேரத்தில்

இரவு நேரம்
சுற்றுமுற்றுப்பார்த்தேன்..
யாரும் இல்லை.
தவிப்பு மேலோங்க..
வலதுகையால் தொடத்துணிந்தேன்.
முடியவில்லை..
இடதுகையால் முயற்சித்தேன்
அருகில் சென்றும்
முடியவில்லை..
உள்உணர்வோ
தொடத்தூண்டியது..
இதுதான் தருணம்
முயற்சி என்றது மூளை.
சற்றே நெளிந்தவனாய்
ஒரு நீளமான
கொம்பு தேடி
சட்டைக்காலரின் வழியாக
மேலிருந்து கீழாக
உள்ளே செலுத்தினேன்
அப்பாடா
நின்றுவிட்டது
நடுமுதுகின் அரிப்பு. 😜😝😜😝

எழுதியவர் : நிலாகண்ணன் (5-Nov-15, 9:04 am)
Tanglish : raathri neratthil
பார்வை : 349

மேலே