நிஜமும் நிழலும்

இறப்பிற்க்கு பின்னதான
கனவென
மௌனம் சூழ்ந்த
பிரபஞ்ச வெளியினில்

நாம்-
முதன்முதலாய்
விரல் தீண்டிக்கொண்டோம்

மை ச்சேல் l எஞ்சேலோ தன
தூரிகைப் பாதையை
நம் அடியொற்றி
அமைத்துக்கொண்டான்

ஏதேன் தோட்டம்
பூத்துக் குலுங்க
இறைவன்
முறுவலித்து த திரும்பினான்

தீண்டற்ச்சுகம் தீராது போக
யுகங்கள் கடந்ததை
இருவரும் அறியோம்

ஏதோ ஒரு யுக முடிவில்
பிரளய வெள்ளம்
நம்மைச் சுற்றி
சூழ்ந்து ஓடியது

தமிழக மூலையொன்றின்
தேநீர்க் கடையில்
காதலர் தற்கொலை-
கிணற்றில் பிணம்
செய்தி உரக்க வாசிக்கப்பட்டது

எழுதியவர் : (5-Nov-15, 12:03 pm)
Tanglish : nijamum nilalum
பார்வை : 108

மேலே