மறுபடியும் வேண்டாம்
![](https://eluthu.com/images/loading.gif)
கடலலை ரசிக்க
கடற்கரை மணல் தேடி
காலாற நடந்து வந்தேன்…
சுற்றிவிட்ட மயக்கத்தில்
நின்றுவிட்ட பூமி
தடுமாறி நடுங்க
சட்டென சீறி பாய்ந்து
திட்டென அழித்தது
கடல் அலை…
ஈறாரு அடி பாய்ந்து
ஈன்றெடுத்த பிள்ளைகளை யெல்லாம்
ஓரிரண்டு மணித்துளியில்
ஒத்தி எடுத்துக்கொண்டு
எஞ்சிய பேரை எல்லாம்
எச்சமாய் விட்டு வைக்க
எஞ்சி நிற்கின்றது
கடற்கரை மணல்
எங்கள் கடைவாயில் வரை…!
மறுபடியும் வேண்டாம்
கடல் தாயே
கருவறை கருவழிக்க உனக்கும்
உரிமை இல்லை…