பிரம்மனின் முதல் ஓவியம் அவள் 555

அவள்...
கறந்த நுரைப்பால் சிரிப்பு
காமவிழி தூண்டில்...
கருகிட்டு சரிந்ததுபோல்
கனத்த நெடுங்கூந்தல்...
உறைந்த பனிக்கட்டி மார்புகள்
உதடுகள் தேன் ஆறு...
உள்ளங்கால்கள் ரப்பர்பால்...
திறந்தவெளி கலையரங்கம்
போல் திருமேனி...
கொடியாய் வளைந்த இடை
விரல்கள் கோவை பழங்கள்...
முதுகு செண்டை மேளம் அவள்
இறைவன் வரைந்த முதல் ஓவியம்...
முதல்[பூ] காதலின்
காவியம்.....