என் நண்பன்
வீதி வழி வந்த ஒருவன் - அன்று
நண்பனாய் ஆனான்!
பாதி வழி கடந்தோம் - அதற்குள்
பிணமாகி போனான்!
சற்று முன் பார்த்தேன் - காலையில்
முகப் பொழிவு!
சாயங்கால நேரம்தான் - கேட்டேன்
மூச்சில் பேரதிர்வு!
பேருந்து சக்கரத்தின் -அடியிலே
கிடந்தானாம்!
பேருந்தின் வேகத்தில் - தலைபிழந்து
இறந்தானாம்!
வீட்டிற்கு போனால் அம்மாவின்
கதறல்!
வீட்டு வாசலில் நண்பனின்
கதறல்!
கதறல்!!கதறல்!!கதறல்
எங்கும் ஒலிக்க
காற்றாகி இங்கே இதை - பார்த்து
அழுதிருப்பான்!
எங்கள் கண்ணீரை துடைக்க -அவன்
கைகளை நீட்டிருப்பான்!
அய்யகோ!! இறைவா
தாயின் கதறல் உன் செவிமடலில்
விழ வில்லையா??
நணபனின் கதறல் உன் காலில்கூட
சேரவில்லையா?
பிராத்தனைகள் ஒவ்வொன்றாய்
இன்றேனும் பலிக்கட்டும்!
இறைவனில் அருளால் அவன் உயிர்
சொர்க்கத்தில் சேரட்டும்!
உயிர் கொடுத்த இறைவா மீண்டும்
அவனுக்கு உயிர்கொடு!!
தாயிடமே அவனை கருவாக
அனுப்பி விடு!
மாலையின் வேலையிலே அவனை
பள்ளி வந்து சேர்த்தும்!
தொழுகை முடிந்த பின் அவனை
குழியே புதைத்தோம்!
சிறுவயது இருந்தாலும் அவனை
கடவுள் தான் அழைத்திருந்தார்!
என்றாவது ஒருநாள் எங்களையையும் அவர்
அழைத்திருப்பார்!
சடங்குகள் முடிந்தாலும்
பாசங்கள் தொடரட்டும்!
கண்ணீரின் வெளிபாட்டில் என் கவிதைகள் மலரட்டும்!
( என் நண்பன் நேற்று விபத்தில் இறந்து விட்டான்!அவன் வயதோ 21 தான்! அவனுக்காக பிராத்தியுங்கள்)