விஞ்ஞானம்

இடி இடித்தால் கடவுள் என்றான் ...
மழைபெய்தால் கடவுள் என்றான்...
மின்னலும் கடவுள் என்றான்...
முதன் முதல் உதித்த மனிதன்...

இருப்பவை அனைத்தையும் உணவாய் தின்றான் ...
இறந்தவன் உண்ட கனியை விஷம் என்று ஒதுக்கி வைத்தான்...
இனி ஒருவரும் இறக்க கூடாதென்று ...
உண்ணா கனிகளை முதலில் விலங்குகளுக்கு கொடுத்தான்...
முதுகலை இல்லாமல் ஞானம் பெற்றான்...

இறந்தவன் உடலை புதைக்க செய்தான் வாசம் கண்டு...
நெருப்பில் இறந்துபோன விலங்கை உணவாய் தின்று ...
கல்லில் கடவுளை கண்டான் கல்லால் விலங்குகளை கொன்றான்
கல்லிலே நெருப்பினை பெற்று ஞானம் பெற்றான் ....

விலங்குகளை எல்லாம் வேட்டையாடி வென்றான்..
வீரத்தின் ஞானம் தற்காப்பில் கற்றான் ...
வீட்டிற்கும் காட்டிற்கும் வேறுபாடு கண்டான்...
வேறுபாட்டின் ஞானம் அன்றே பெற்றான் ...

மழையின் அருமை செடி கொடியின் வளர்ச்சியில் கண்டான்...
நிலவின் மடியில் உறங்க கற்றுகொண்டான் ...
நேற்றிவேர்வை நிலத்தில் விழ உழைக்க சென்றான் ...
உறவுகள் பிரிவுகள் உணரும் ஞானம் பெற்றான் ....

இருப்பதை கொடுத்து இல்லாததை பெரும் ஞானம் பெற்றான்...
கைவிரலில் கணக்கை கற்றான் கற்பிக்கும் முறையை கொண்டுவந்தான்...
தன்னைவிட ஒருசக்தி உண்டு என்பதை பயத்தில் கண்டான்...
தன்னை காக்கும் கடவுளின் சக்தியை உணரும் ஞானம் பெற்றான்....

உருண்டோடிய வேகத்தில் உலகில் உதவ பணத்தை கண்டான்...
பணமே உலகம் என்னும் நம்பிக்கை கொண்டான்..
தர்க்காத்துகொள்ளும் விலங்கிடம் அன்பைகாட்டினான்....
அன்பை காட்ட வேண்டிய தன் இனத்திடம் தர்க்கத்துகொள்ள நினைத்தான்...

மனிதர்களை கொன்று மாவீரன் என்றான்...
வேட்டை விலங்குகளிடம் இருந்து மனிதனிடத்தில் மாற்றினான்...
வேலும் வாழும் வேண்டாம் என்று வெடியும் விஷமும் கண்டான்....
மனிதன் என்னும் கூட்டத்தில் தன்னை தலைவன் என்றான்..

தனக்கொரு இடம் வேண்டும் என்று அனைத்தும் தனதாகும் ஆசை கொண்டான்...
பொதுநலம் மறந்து பொறுமை இழந்து தன்னலம் பெற்று தலைவன் ஆகும் எண்ணம் கொண்டான்.
தன் இனத்தை கொன்று தன்னை தலைவன் ஆக்க எண்ணினான்...
ஞானம் பெற்ற அனைவரும் விஞ்ஞானம் கற்க பெற்றான்...

விதையின் பருவத்தை வேகமாக்க விஷம் தேடினான் ...
வினையை தேடித்தேடி வேதியல் வினை மாற்றும் ஞானம் பெற்றான்...
அணுக்கரு உருக்கு வினை அணுவை பிளக்கும் வினை...
செடியில் தொடங்கி விலங்கை தொட்டு மனிதனில் வேதியல் மாற்றம் கண்டான்..

அனைத்திலும் வினையை செய்து ஆசை தீர மனிதன் ...
அண்ணாந்து பார்த்ததில் விஷயம் விஞ்ஞானம் விரிவடைந்தது ...
விந்தையிலும் விந்தை கண்ட விஞ்ஞானம் விதியை மாற்றிய ...
மனிதனின் மூளை மங்க செய்யும் விஞ்ஞானம்

விரும்பும் anaiththum அனைத்தும் விஞ்ஞானம் கொடுத்ததேன்றான்...
தொலைகாட்சியில் தொடங்கி தொலைதூரம் செல்லும் விமானம் வரை ....
காலில் தொடங்கி தலையில் முடியும் அனைத்து நோய் வரும் வரை ...
பிறப்பில் தொடங்கி இறக்கும் வரை விஞ்ஞானம் மனிதனுக்கு என்றான்...

இயற்க்கை தந்த வரத்தை தன் சுய நலத்தில் விஞ்ஞானம் என்று பெயர் சூட்டி...
விந்தை மிகுந்த இந்த உலகை வியப்பில் ஆழ்த்தினான்...
உறவுகளின் இதயத்தில் அன்பை எடுத்து பொருளை விதைத்தான்...
பொருளின் வளர்ச்சியில் விஞ்ஞானம் வளர கண்டான் ...

கால்நடையை வைத்து தன் கால் வேலை குறைத்தான்,,,
தண்ணீரில் மிதக்கும் மரத்தை தரனியெங்கும் சுற்றி வரும் கப்பல் என்றான்.. ...
உருண்டோடிய சக்கரத்தை ஊர் ஊரக சுற்ற செய்தான் ....
உலகம் முழுவதும் சுற்றிவர எளிதில் பயணிக்க விமானம் கண்டான்...

நேரடி பேச்சை தொலைத்தோம் நண்பர்களுடன் ...
விஞ்ஞானம் தொலைபேசியில்வளர்ந்ததால்....
போதையில் கனவுகள் கண்டோம் ....
விஞ்ஞானம் போதை பொருளை விதித்ததால்...

சுயநலம் சிரிப்பை கற்றுகொண்டோம் ....
விஞ்ஞானம் தேவையில்லா பொருளை விதைத்ததால்...
காதலும் கல்யாணமும் வியாபாரத்தில் வளர்க்கிறோம்...
விஞ்ஞானம் வளர்ந்து பொருளாதாரம் வளர்ந்ததால்....

குழந்தை ஓடிவிளையாடும் மாலை இல்லை...
விஞ்ஞானம் வளர்ந்ததில் குழந்தை உறங்கவும் நேரம் இல்லை...
சுகாதார கட்டுப்பாடு உணவில் இல்லை உணவு மருந்தானதால்...
விஞ்ஞானம் வளர்ச்சியில் செயற்கை அதிகம் என்பதால் இயற்க்கை மறைவதால்...

பாலில் தொடங்கி பஞ்சுவரை விஞ்ஞானம் ...
வீடு தொடங்கி காடுவரை விஞ்ஞானம் ...
விஞ்ஞானம் வளர்த்தது மனிதன் மூளை வைத்து ....
விஞ்ஞானம் வளர்வதில் மூளை வேலை இல்லாமல் போய்விடும்
விஸ்வரூபம் விஞ்ஞானம் என்பதால்....

வளர்ச்சியில் இயற்கையை தொலைக்க வேண்டாம்...
இயற்கையை தொலைக்கும் விஞ்ஞானம் நமக்கு வேண்டாம்...
இயற்க்கை வளர்க்கும் விஞ்ஞானம் வேண்டும் ...
இயற்கைக்காக மட்டுமே விஞ்ஞானம் பயன்பட வேண்டும்.....

எழுதியவர் : samuel (8-Nov-15, 2:02 pm)
சேர்த்தது : சாமுவேல்
Tanglish : vignaanam
பார்வை : 287

மேலே