ஆதி சக்தி

அண்டம் எல்லாம் ஆன தாயே
ஆயி மகமாயி நீயே
பிண்டம் என இங்கு வந்தேன் ஒரு
பிறவியையும் நீயே தந்தாயே
உயிர்களின் ஆதி நீயே
கண்மூடாமல் காக்கும் எங்கள் அன்புத்தாயே
ஆயி மகமாயி நீயே

மண்ணில் உள்ள மனிதருக்கெல்லாம்
மதியென்று ஒன்று இங்கு ஏன் கொடுத்தாய்
அந்த மதியைக்கொண்டு மனிதன்
உன்னை பரிகாசம் செய்யும் நிலையையும் ஏன் தந்தாய்
உருவம் என்று ஒன்று இங்கு உனக்கு உண்டா என்றேதான்
மனிதன் இப்போ மண்டையை உடைக்கின்றான்
ரூபம் என்ன அரூபம் என்ன தாயே உன்னைக்காணத்தான்
ஈனக்கன்களாலே என்றும் முடியாது
அண்டம் எல்லாம் ஆட்சி செய்யும் ஆதிசக்தியே
உன் உருவம் இங்கு வேறு இல்லை அண்டவெளியே
அடி ஆதி சக்தி ஆராய்சிக்கப்பார்ப்பட்டவளே

ஆடு பலி வேணுமுன்னு
ஆத்தா நீயும் எப்பொழுதும் கேட்டதில்லை
அந்த ஆட்டை வெட்டி திண்ணுபுட்டு
ஆத்தா கேட்டா என்று சொல்லும் மனுஷபுள்ள
நீயே இங்கு உயிருக்கெல்லாம் ஆதியென்று ஆனாயே
உந்தன் பெயரில் உயிரைக்கொல்லும் நிலை காணாயோ
ரத்தம் காட்டி பூஜை செய்யும் மனிதன் மீது நீயும்தான்
பித்தமாகி சத்தமாக யுத்தம் செய்வாயோ
காமாட்சியே மீனாட்சியே காளியம்மா
எங்க தவறுகளை மன்னிச்சி அருளம்மா
ஒரு காலம் நேரம் பாக்காமத்தான் காக்கும் தாயே

அண்டம் எல்லாம் ஆன தாயே
ஆயி மகமாயி நீயே

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (10-Nov-15, 7:50 pm)
Tanglish : Aathai sakthi
பார்வை : 248

மேலே