சிறை பறவை
அவளென்ன, உன் குலம் தழைக்க வாரிசு ஈன்றெடுக்கும் இயந்திரமா?
அவளென்ன, உன் பெற்றோரின் முதுமையில் சேவை புரியும் செவிலியரா?
உன் உடல் பசிக்கு உணவாகும் தாசியா?
இல்லை, நிதி பற்றாமையில் சுரண்டப்படும் கஜானாவா?
இல்லதரசியென போலி பெயர் கொண்ட அடிமையா?
சிறகுகளை கட்டிவிட்டு சுதந்திர வானில் பறக்கவிடும் கண்கண்ட கணவன்மார்களே!
அரியனையில்லாமல் ஆட்சி செய்யும் திருவாளர்களே!
கற்பனைக்கும் அப்பாற்பட்ட உச்சியை எட்டி விடும் மனையாளை காண அச்சம் தடுக்கிறதோ?
ஈனமுள்ள ஆண்மகனென்றால், கட்டுகளை அவிழ்த்து விட்டு பாருங்கள்,
அவள் எட்டும் உச்சத்தை!
பட்சி எச்சமிடுவது கூட உணராமல் அண்ணார்ந்து வாய் பிளந்து கிடப்பீர்.