மலர்களே மெல்ல மலருங்கள்

மலர்களே மெல்ல மலருங்கள்
இதழ்க் கதவை மெல்லத் திறவுங்கள்
தென்றலுக்கு இன்று விடுமுறையாம்
கவித் தென்றலை ஏந்தி நிற்கிறேன்
ஆம்
மலர்களே மெல்ல மலருங்கள்
மலர்க் கதவை மெல்லத் திறந்து
மனத் தென்றலை வரவேற்கும் மலர்களே
நன்றி !
---கவின் சாரலன்