பொறுப்புத் துறப்பு

ஒரு வார்த்தையில் சொல்ல சொன்னால் அழகு தான் நீ...!
அப்படி எல்லாம் சொல்லிவிட நீ ஒன்றும் ஒரு வார்த்தை ஒரு லட்சம் இல்லையே..!
மாத்தியோசி என்கிறது என் கற்பனை உலகம்!
அது! இது! எது! என்று குழம்பி இருந்தேன்...
யோசி! யோசி! மாத்தியோசி! என்றாய்...
கலக்க போவது யாரு? என்று கேட்டாய்...
யாருக்குத் தெரியும் என்றேன்..
தலையில் கொட்டி...
தாறுமாறாய் திட்டி...
கேள்வியும் நீயாகி பதிலும் நீயாகி...
பதிலும் தந்தாய் " நீ தான் " என்று...
ரெட்டை வால் குருவியாய் சுற்றித் திரிந்த நம்மை...
ஆண்டாள் அழகர் கோவிலில் திருமணம் முடித்து வைத்தனர்...
இது காதலா...! என்றேன்!
உறவுகள் தொடர்கதை என்றாய்...!
என் வாழ்க்கை நந்தவனத்தில்
என் கணவன் என் தோழன் ஆனாய்...
நம் களத்து வீடு தெய்வம் தந்த வீடானது...இன்று உன்னால்...
கல்யாணம் முதல் கடைசி வரை வேண்டும் என்றேன் நீ எனக்கு...
கல்யாணம் முதல் காதல் வரை என்று வாழ்ந்து காட்டுகிறாய்...
சரவணனும் மீனாட்சியும் அடம் பிடிக்கின்றனர்!
வடை சுடும் பாட்டியிடம் மகாபாரதம் கதை கூற சொல்லி..!
சரவணனின் நண்பன் பாலகணபதி
தன் சுட்டெலியை வாங்கிச் செல்ல வாகனம் ஏறி வந்து கொண்டே இருக்கிறான்...
நான் உன்னை தேடிக் கொண்டிருக்கிறேன்...
என் உயிருடன் ஒரு தாமி எடுத்துக்கொள்ள...
என் அன்பு தங்கைக்கு...
அண்ணன் சரவணன் எழுதுவது...
தெய்வம் தந்த என் தங்கை
உன் வாழ்க்கை...
புதுக்கவிதையாய் , கனா காணும் காலங்களாய் என்றென்றும் பிரகாசிக்கட்டும்...
இறைவா! என்ன நான் கேட்பேன்!
என்று நீ அறிவாய்...
என் தாயுமானவரும் அறிவார்...
பிரிவோம் சந்திப்போம்...
இறைவா! அவள் வேண்டியதுடன்
என் வேண்டுதலையும் ஏற்று நிறைவேற்றிடு!
Office-ன் பணிச் சுமையால் காதலிக்க நேரமில்லை... என்பார்கள்...
ஆனால் எதையும் அழகாய் மாற்றினாள் அவள் அன்பினால்....
அவள் வேண்டி இருப்பாள் ...!
என் குடும்பம் எப்பொழுதும் இதே மகிழ்ச்சியை பெற்றிருக்க வேண்டும்...
என் தாயுமானவர் மடியில் ஒரு குழந்தை போல் துயில வேண்டும் இறுதியிலும்...
நானும் அதைத் தான் வேண்டுகிறேன் ஒரு சிறு மாற்றத்துடன்
என்னவள் மடியில்...
~ பிரபாவதி வீரமுத்து