உரிமைகள் பறிக்கப்படும்

அவள்..
உலகின் மூத்த குடிமகள்!
நூற்றாண்டுகளை கடந்த கன்னி அவள்..!
கருண்ட மேகங்களிலிருந்து
உருண்டு உதிரும்
மழைத்துளியை போல
தூய்மையானவள்..!
வர்ணனைகளுக்குள் அடங்காத
வனப்பை உடையவள்..
ஆடவர் பெண்டிர் என
அனைவராலும் புகழ பட்டவள்..!
தாய்மையின் இலக்கணமாய்
வாய்மையின் அடையாளமாய் விளங்கியவள்..
தமிழ்த்தாய் எனும்
பெயரை உடையவள்...!!!
அன்றொரு நாள்
அண்டை நாட்டவர் என
அன்போடு உபசரித்து
அவள்
விருந்து படைக்க,
அவனோ..
கன்னம் வைத்த கள்வனாய்
தீமை அறியா தமிழர் நெஞ்சில்
தீராத வியாதியாய்
விதைத்துவிட்டு சென்று விட்டான்
அவன் கலாச்சாரத்தையும்
கட்டுப்பாடுகளையும்..!
களையறுக்க முடியாத
கருவேல மரங்களாய்
அவை துளிர்விட
தொடங்கின நம்
தூய தேசத்தில்..!
விரதம் இருந்தவள்
விருந்து படைத்தார்போல,
வளங்களை வாரிகொடுத்தவள்
வளம் குன்றி நிற்க,
யாசகம் பெற்றவன்
எஜமான் ஆனான்...
கால சக்கரத்தின் சூழ்ச்சியில்
பிள்ளைகளும் பெற்றவளை
மறந்தனர்...!
தன் தலைமுறையே
தன்னை ஏற்க மறுக்க..
உயிரோடு இருக்கையில்
உதிரம் உரைவதைபோல
உரிமைகள் பறிக்கப்பட்டவளாய்,
அவள் கதறும் அந்த
உருக்கமான கதறல்
இன்னும் எட்டவில்லை
இந்த தலைமுறையினரின்
செவிகளுக்கு..!!!
நகரட்டும் நாட்கள்...
இன்னும் சில
நூற்றாண்டுகள் கழித்து
தனிஒரு தமிழன்
கலங்கிய கண்களோடு
வரலாற்றின் பக்கங்களை
புரட்டி பார்க்கையில்...
அகிலத்தின் அழியாத
அதிசயமாய் "தமிழ்"
நிலைத்து நிற்கும்...
அன்று குரல்
தழுதழுக்க
குற்ற உணர்வோடசொல்வான்
"நானும் தமிழன்" என்று...
அப்போது உச்சி குளிர்ந்து
உயிர் சிலிர்ப்பாள் தமிழன்னை..!
அந்த கணம் உரிமைகள் பறிக்கப்பட்டு,
விரட்டப்படும் நம்
மண்ணில் நிலைகொண்டிருக்கும்
மாசுக்கள் அனைத்தும்..!

எழுதியவர் : காயத்ரிசேகர் (15-Nov-15, 10:45 pm)
பார்வை : 105

புதிய படைப்புகள்

மேலே