மீண்டும் மீண்டும்

தினம்தோறும் வீடு தேடி வரும்
செய்திதாளின் பக்கங்களை புரட்டினால் போதும்
கண்கள் குளமாகும்....
பணத்துக்காக பச்சிளம் குழந்தையை
விற்பதில் துடங்கி...
பிழைப்புக்காக பிறர் வயிற்றில்
அடிப்பதில் தொடர்ந்து...
வெரிதீர்க்க பெண்ணின் கற்பை
கவர்வதில் கடந்து ...
சுகத்துக்காக கருவறையை
கழிப்பறையாக்கி ...
சொர்ணத்துக்காக முதியவர்களை
கழுத்தறுப்பது வரை
முடிவில்லாமல் தொடருகிறது - சமூக அவலங்கள் ..
மீண்டும் மீண்டும் சிந்திக்கிறேன்!!
முற்றுப்புள்ளி இல்லாமல் தொடரும் இந்த அவலங்களுக்கு
காரணம் யார் என்று....
இதில் சந்தேகம் என்ன..
நான் தான்!!! நான் தான் முழு காரணமும்!!!!
கண் முன்னே நடக்கும்
சிறு சிறு தவறுகளையும் தட்டிகேக்க
துணிவில்லமலும் நேரமில்லாமலும்
அலச்சியத்தோடு விட்டுச்சென்றவை
இன்று பூதாகரமாக நிற்கிறது......
என்ன செய்யலாம்???
பாட்டனும் பூட்டனும் வாங்கிய சுதந்திரத்தை
இன்றைய அரசியல் தெரியாத சகுனிகள்
அடகு வைத்துவிட்டனர் - சமூக அரக்கர்களிடம்...
மீண்டும் தொடங்கணும் ஒரு போராட்டம்
அடகு போன சுதந்திரத்தை மீட்டு எடுக்க...
தோழனே துணையாக வா!!! ஒன்று சேர்வோம்!!!
சிறு சிறு தவறுகளையும் எதிர்போம்!!!
கரை படிந்த இந்தியாவை சுத்தம் செய்வோம்!!!
மீண்டும் மீண்டும் சிந்திப்போம்!!
மாண்டு போன சமூகத்துக்கு உயிர் கொடுப்போம்!!!
மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாகும்
அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.