வின் ஞானம்

நான் முனையும், நடுவும் இல்லாத
இயற்கையின் பரப்பு - பரப்பின் இயற்கை

பல்பிரபஞ்சம் என் பெயர்!

சிறிதினும் சிறியதை பெரிதினும் பெரிதோடு
பொருத்தி வைத்திருக்கிறது எனது பிரமாண்ட இருட்டு

நான் சற்றே வாய் திறந்தால்
அது கருந்துளைவெளி [black hole]

பூமி, நெப்டியூன், சனி, வியாழன் என
விரியும் எனது அளவுகள்...

பின்...
தன்னைக் கரைத்து
சக்தி கொடுத்துக் கொண்டே இருக்கும்
சூரியன்!

சூரியக் குடும்பம் தாண்டியும் விரியும் எனது காலனிகள்

சிறிதாய் இல்லாத சிரியஸ்,
போலக்ஸ், சிவப்பு இராட்சதன்,
பின் ஆகப் பெருநட்சத்திரம் -
கேனிஸ் மெஜாரிஸ்!

இவை மட்டுமா?
கோடான கோடி பெருவெளிகள் உருண்டு புரளும்
பேரண்டச் சராசரப் பெருக்கு யாம்!

பிரபஞ்ச புத்தகத்தில் உன் பூமி சின்னஞ்சிறு புள்ளி

- எனில் நீ?
....

தடுமாறாதே நண்பனே - துணுக்கல்ல நீ!
கவனி –

*** ஒளி ஆண்டுகள் விரியும் நெஞ்சம்
*** அண்டமும் அளக்கும் அறிவு
*** யாக்கை கடந்த காதல்
*** சமூகம் சிதைக்காத உன் சிந்தனைவெளி
*** நீ ஆற்றிய சூரியக்கொடை
*** உன்னைப் புரிந்த ‘உனதுகள்’
*** உனக்குப் பின்னும் வாழும் ‘உனது விழுதுகள்’
*** ‘பொழைக்கிற வழி’ களைந்த ‘நிர்வாண நீ’
*** எதிர்பார்ப்புகள், கட்டாயங்கள், சமரசங்கள்
களைந்த உன் வெற்றுக்கால்கள்
*** பாசாங்கில்லா அன்பு செய்த அர்த்தப் பொழுதுகள்
*** அகநக செய்த நட்புகள்
*** மதமும் கடந்த ஞானத்தேடல்
*** கொள்கை சிதையாத வாழ்க்கை
*** உனது பிறப்பின் தனித்த பயன்

----------- இவை உன்னுள் உண்டா சொல்?
----------- உண்டென்றால் நீ பல்பிரபஞ்சம்

----------- உன்னுள் தான் சுழல்கிறது
----------- என் பிரபஞ்சத்திற்கான விடை

----------- விண் ஞானம் - உன் ஞானம்!
----------- வரட்டுமா?

எழுதியவர் : புதுயுகன் (16-Nov-15, 5:09 pm)
Tanglish : vin nanam
பார்வை : 211

புதிய படைப்புகள்

மேலே