உரிமைகள் பறிக்கப்படும்-4
பெண்ணே !
அன்று நீ
மண்ணோடு மண்ணாய்
புதைந்து கிடந்த
காலத்தைப் பொருக்காதவன்
மஹாகவி பாரதி.......
இன்று
விண்வெளிப் பாதைகளும்
உன் பாதம் பட காத்திருக்கிறது.....
உனக்குள் இருக்கும்
திறமைகளை வெளிக்கொணர
முயற்சிக்காவிடில்
அகிலத்தில் உந்தன்
உரிமைகள் பறிக்கப்படும்.......
-தஞ்சை குணா