மழை

கார் மேகம் கருத்திருக்க
மேகமது மழை பொழிய
பட்டாசு புஸ்ஸ் ஆக
தித்திக்கும் தீபாவளி
நினைபெல்லாம் பொய்யாக்க
வெள்ளமது பெருத்தோட
தித்திக்கும் தீபாவளி
இப்போ தத்தளிக்கும் வானவெளி

வாங்கிட்ட புத்தாடை உடுத்தவில்லை
குளிர்சாதனை பெட்டிதனை திறக்கவில்லை
இனிப்புகளின் மழையிலும்
பலகாரத்தின் துணையிலும்
தூங்கிவிட்டேன் சிறுது நேரம்
எழுந்திட்டு பார்க்கையிலே
எழுந்திட்டு பார்க்கையிலே
தத்தளிக்கும் தண்ணீயிலே

வருண பகவான் கண் திறந்தான்
விவசாயம் செழிகுமேன் றேன்னிய நேரத்தில்
விவசாய நிலங்களெல்லாம் தண்ணீயிலே மிதந்திட
கால் நடைகள் காணமல் போய்விட
கொசுக்கள் சளைக்காமல் பறந்திட
பாம்பெல்லாம் வழி தெரியாமல் இல்லங்களில்
இல்லத்தார் செய்வது அறியாமல் தெருவுகளில்
பருவமழை பொய்க்காமல் பெய்தது
அன்பின் மிகையால் நிற்காமல் பெய்தது
வாரி அள்ளி முத்தம் கொடுக்க
ஏரிகள் இல்லாமல் கடலுக்கு பாய்ந்தது
மாதம் இரண்டு கரைந்தால் பாவிகள்
தூற்றுவர் மழை இல்லை என்று
வந்திட்டால் பொருமுவர் வெள்ளம் என்று

எழுதியவர் : கீதா பாலசுப்ரமணியன் (17-Nov-15, 2:54 pm)
சேர்த்தது : geetha balasubramanian
Tanglish : mazhai
பார்வை : 114

மேலே