விஞ்ஞானம்
விஞ்ஞானம்
இங்கே விஞ்ஞானம் விற்கப்படுகிறது!..
அறிவியல் அடிமையாக்கபடுகிறது!..
மனிதனின் சுகபோக வாழ்க்கையில்
ஜீவகாருண்யமும் பூமியின் சமநிலையும் சமாதியாகிறது!..
காற்றில் கலந்துள்ள அலைகற்றையால்
காரணம் அறியாது மாண்டுபோகுது சிட்டுகுருவி!..
அணுவை பிளந்து ஆற்றல் எடுத்து
கடலில் முழ்கடிக்கபடும் கழிவால்
காணாமல் போகிறது கடல் உயிரினங்கள்!..
குளிர்சாதனபெட்டியோ பூமியையே வேகவைக்கிறது!..
பணக்காரர்களின் சட்டைப்பையில் இருக்கும் அறிவியல்
ஏழையின் வீட்டில் எட்டியும் பார்ப்பதில்லை!..
சிலர் பதனிடபட்ட குளிர்காற்றில் உல்லாசமாக இருக்க
நாமெல்லாம் வெப்பமயமாதலில் வெந்து சாவதா?..
வளர்ச்சி என்ற பெயரில் இங்கே
இயற்கையோடு மானுடமும் வீழ்த்தப்படுகிறது!..
வாழ்நாட்களை அடகுவைத்தல்லவா
நாம் இங்கு வாழ்வை வசந்தமாக்குகிறோம்!..
இது ஒருவழி பாதை போல இங்கே
எதையும் மாற்ற இயலாது!..
விளைவுகளோடு நடைபோட நாம்
எல்லோரும் பழகிபோனோம் இன்று!..